Reading Time: < 1 minute
றொரன்டோவில் இலக்ரிஷன்களாக கடமையாற்றி வரும் 12 பேருக்கு லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக இந்த மின் பணியாளர்கள் ஒன்றாக லொத்தர் சீட்டிலுப்பில் விளையாடி வருகின்றனர்.
இந்த 12 பேரும் ஒன்றாக இணைந்து தெரிவு செய்த அனைத்து இலக்கங்களும் பொருந்தியதன் காரணமாக இவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர் பணப்பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுக்கப்பட்டதாக நண்பர் ஒருவர் கூறியதாகவும் அதனை தான் நம்பவில்லை எனவும் இந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கின்றார்.
பின்னர் வெற்றி இலக்கங்களை பரீட்சித்த போது பணப்பரிசு கிடைக்கப்பெற்றுள்ளமை உறுதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.