டொரன்டோ நகரில் நபர் ஒருவர் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார் எனக் கூறி அவரது நண்பர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இசை ரசிகரான வோல்டர் போர்பிரிச் (Walter Froebrich) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்ட போதிலும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது நண்பர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குடும்ப மருத்துவர் ஒருவர் இல்லாத காரணத்தினால் நோய் அறிகுறிகளை சரியாக கண்டறிந்து சிகிச்சை வழங்கப்பட முடியவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் ப்ரோபிரிச் பதிவுகளையும் இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப மருத்துவர் ஒருவரை பெற்றுக்கொள்ள உதவுமாறும் வலியினால் போராடி வருவதாகவும் அவர் உருக்கமான பதிவுகளை சமூக ஊடகங்களின் வாயிலாக இட்டிருந்தார்.