ரொறோண்டோ வீட்டுச் சந்தை மீண்டுமொரு தடவை சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என சந்தை அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். பாவனையாளர்களின் கடன்பெறு தகமைகளைத் தரவுப்படுத்தும் நிறுவனமான எக்குவிஃபக்ஸ் (Equifax) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அடமானக் கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வீட்டுச் சொந்தக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 9 வருடங்களின் பின் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது. அதுவரை காலமும் அடமான வட்டி வீதம் வரலாற்றிலேயே மிகவும் குறைந்ததாக இருந்தபோது கடன்களைப் பெற்று வீடுகளை வாங்கியவர்கள் தற்போதைய வட்டி வீதத்தில் கடன்சுமையைத் தாங்கமுடியாமல் போயிருப்பது காரணமாக இருக்கலாமெனக் கூறப்படுகிறது.
எக்குவிஃபக்ஸ் நியமங்களின்படி கடனைப் பெற்ற ஒருவர் தனது தவணைக்கான கட்டுப்பணத்தை 90 நாட்களுக்கு மேல் தாமதிப்பாரானால் அவரது கணக்கு ‘தவறிய கணக்கு’ (delinquency account) என்ற வகைக்குள் அடக்கப்பட்டுவிடும். இது மேலும் தொடருமானால் கடனை வழங்கிய நிறுவனமோ அல்லது தனிநபரோ கடனைத் திருப்பி அடைக்கும்படி கட்டளையிடுவதும் அதற்கு இணக்கம் காணப்படாத பட்சத்தில் அவ்வீட்டைச் சுவீகரித்துத் தனது நட்டத்தை ஈட்டிக்கொள்ள முற்படுவர். இதுபற்றிய பூரண விளக்கமற்ற பல கடனாளிகள் இறுதி நேரத்தில் பெருந்தொகை பணத்தைச் செலவழித்து வீட்டை மீட்கும் வழிகளில் இறங்கவேண்டி ஏற்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.