Reading Time: < 1 minute

ரொறொன்ரோவில் இதுவரை இல்லாத அளவு பதிவான வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020ஆண்டு வெறுப்பு குற்ற புள்ளிவிபர அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 139ஆக இருந்து 2020ஆம் ஆண்டு 210ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு யூத ரொறொன்ரோரியர்கள் பொதுவாக வெறுப்புக் குற்றங்களில் குறிவைக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஆனால், கருப்பு மற்றும் ஆசிய சமூகங்களின் உறுப்பினர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களில் வியத்தகு அதிகரிப்பு இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அத்துடன், வெறுப்புக் குற்றங்கள் தொடர்பான கைதுகளின் எண்ணிக்கையும் 2020ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு 23ஆக இருந்து 2020ஆம் ஆண்டு 41ஆக அதிகரித்துள்ளது.