Reading Time: < 1 minute
ரொறொன்ரோ வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்களை அமைக்கவுள்ளதாக நகர சபை அறிவித்துள்ளது.
இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 4,750க்கும் மேற்பட்ட கூடுதல் நியமனங்கள் சேர்க்கப்படும் என்றும் இவை நகரின் ஆறு நோய்த்தடுப்பு மருந்தகங்களில் பரவலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் நடைபெற ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்கு கூடுதலாக இது மொத்தம் 19,000 புதிய தடுப்பூசி மையங்கள்இருக்கும்.
இந்த புதிய நியமனங்கள் மாலை 4 மணிக்கு மாகாணத் தடுப்பூசி முன்பதிவு முறையில் கிடைக்கும். புதன்கிழமையன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
இதற்கு மேல், 10,000 புதிய தடுப்பூசி மையங்களும் அடுத்த வாரம் ரொறொன்ரோ நகர சபையால் நடத்தப்படும் கிளினிக்குகளில் சேர்க்கப்படுகின்றன.