ரொறொன்ரோவில் கடந்த ஆண்டு சொத்து விற்பனை உச்சத்தை தொட்டதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ரொறென்ரோ பெரும்பாகத்தின் சராசரி விலை 929,699 டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 95,151 சொத்துகள் கைமாறியுள்ளது.
முன்னைய வருடத்துடன் (2019) ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிக சொத்துகள் கைமாறியுள்ளன.
இதற்கு மறுதலையாக ரொறென்ரோ நகரில் அடுக்குமாடி மனைகளின் விலை 5 தசவீதத்தினால் இறங்கியுள்ளது. (சராசரி அடுக்குமனை விலை 625,828 டொலர்கள்)
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் சொகுசு வீடுகளின் வியாபாரம் அதிகூடிய உச்சத்தை அடைந்துள்ளது. (3 மில்லியன் டொலர்களிற்கு மேலான விலை உள்ள வீடு மற்றும் மனைகளை சொகுசு வீடு என அழைக்கப்படும்).
மொத்தமாக 1068 சொகுசு வீடுகள் கைமாறியுள்ளது. முன்னைய வருடத்துடன் (2019) ஒப்பிடும்போது வியாபாரம் 56 சதவீதம் அதிகரித்துள்ளது. ரொறொன்ரோவில் மட்டும் 652 சொத்துகள் விற்று, வாங்கப்பட்டுள்ளது.