Reading Time: < 1 minute

ரொறன்ரோ விமான நிலையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடாவிற்குள் உள்ளே பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் முன்கூட்டியே ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

விமான பயண நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சோதனைகளுக்காக இவ்வாறு முன்கூட்டியே வருகை தருமாறு கோரப்பட்டுள்ளது. முன்கூட்டியே வருகை தருவதுடன் பாதுகாப்பு நோக்கங்களின் அடிப்படையிலான சோதனைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானப் பயணிகள் இரண்டு மணித்தியாலங்களும், வெளிநாட்டு பயணிகள் மூன்று மணித்தியாலங்கள் முன்கூட்டியும் விமான நிலையம் வருமாறு கோரப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக விமான நிலைய அதிகாரசபையினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பாதுகாப்பு சோதனைகளை துரித கதியில் நடாத்துவதில் விமான நிலைய நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.

விமான நிலையத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டமை குறித்து பயணிகள் சமூக ஊடகங்களின் வாயிலாக தங்களது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.