ரொறன்ரோவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடுகளின் விலைகள் 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறெனினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீட்டு விலைகளில் 5 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வீடுகளின் சராசரி விலை 1038390 டொலர்களாகவும், பெப்ரவரி மாதம் 1095617 டொலர்களாகவும் காணப்பட்டுள்ளது.
வீடுகளின் விலைகள் குறைவடைந்து செல்லும் நிலையிலும், வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போர் இன்னமும் விலை குறையும் என்ற நம்பிக்கையில் கொள்வனவு செய்வதனை காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.