Reading Time: < 1 minute

ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஒருவரை பல தடவைகள் சுட்டு படுகொலை செய்ய முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி மிசிசாகாவில் கியூ பகுதியில் இந்த கொலை முயற்சி இடம்பெற்றதாக பீல் பிராந்திய போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கடத்தப்பட்ட நபர் மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போலீசாரினால் அடையாளம் காணப்பட்டார்.

ரொறன்ரோவை சேர்ந்த 33 வயதான லிபான் அப்டி சியாட் என்பவரை என தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமுனையில் கடத்தி கொலை செய்ய முயற்சித்ததாக இந்த சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபருக்கு எதிராக பிராம்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் போலீசார்க்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.