உக்ரைனில் எங்கள் பிள்ளைகளை பாதுகாக்க, நாங்கள் உயிரையும் விடத் தயாராக இருப்பதாக கீவ் மேயர் ரொறன்ரோ நகர சபையில் உருக்கமாக பேசியுள்ளார்.
ரஷ்யா அளவுக்கு உக்ரைனிடம் ஆயுத பலம் ஏதுமில்லை என்றாலும், துணிவுடன் அதிர்கொள்ளும் மன வலிமை இருப்பதாக தெரிவித்துள்ளார் கீவ் மேயர் Vitaliy Klitschko.
வியாழக்கிழமை பகல் காணொளி மூலம் ரொறன்ரோ நகர சபை உறுப்பினர்களுடன் பேசிய அவர், எங்கள் நகரை, குடும்பங்களை, எங்கள் பிள்ளைகளை காக்கவே உக்ரைனிய மக்களான நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றார்.
மட்டுமின்றி, எங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் உயிரை விட்டுவிடவும் தயாராக இருக்கிறோம் எனவும் உருக்கமாக பேசியுள்ளார் Vitaliy Klitschko.
உக்ரைனுக்காக இப்போது கனடா செய்துகொண்டிருக்கும் அனைத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ள அவர், அரசியல், பொருளாதார ஆதரவிற்காக, உக்ரைனில் இருந்து அகதிகளுக்கு ஆதரவளிப்பது, எங்கள் நாட்டிற்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவது என அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
40 நாட்கள் கடந்த ரஷ்யாவின் படையெடுப்பும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் உக்ரைனிய மக்கள் 4 மில்லியன் பேர்களை நாட்டைவிட்டு வெளியேற வைத்துள்ளது.
மட்டுமின்றி, குண்டுவீச்சுக்கு பயந்து, சிகிக்கொண்ட ஆயிரக்கணகான மக்கள் கொல்லப்பட்டதுடன், காயங்களுடனும் தப்பியுள்ளனர். மேலும், மொத்த மக்கள் தொகையில் கால்பங்குக்கும் அதிகமானோர் ரஷ்ய குண்டுவீச்சால் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.
ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் இன அழிப்பை முன்னெடுத்து வருவதாக கூறும் Vitaliy Klitschko, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளால் மட்டும், உக்ரைனின் தற்போதைய நிலையை விளக்க முடியாது என்றார்.