Reading Time: < 1 minute

ரெறான்ரோ சிறைச்சாலையில் தாக்குதலுக்கு இலக்காகி கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

69 வயதான கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 54 வயதான கைதி ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.