ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ரொறன்ரோவின் விக்டோரியா பார்க் மற்றும் லோரன்ஸ் அவன்யூ பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்த மூன்று பேரும் காயமடைந்தனரா அல்லது வெவ்வேறு சம்பவங்கள் குறித்த அதே பகுதியில் பதிவாகியுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தல் 416-808-3300 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.