ரொறன்ரோவில் வேகமாக வாகனத்தைச் செலுத்தியவர்களிடமிருந்து 30 மில்லியன் டொலர் அபராத தொகை சேகரிக்கப்படுவதற்காக காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டாண்டு காலத்தில் இவ்வாறு அபராதப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்பீட் கமராக்கள் மூலம் வேகமாக வாகனத்தைச் செலுத்துவோர் விபரங்கள் திரட்டப்பட்டு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜுலை முதல் 2022ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையில் தானியங்கி அடிப்படையில் வேகத்தை மதிப்பீடு செய்யும் கருவிகளின் ஊடாக 560,000 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வாகனங்களைச் செலுத்தியவர்களிடமிருந்து 34 மில்லியன் டொலர்கள் அறவீடு செய்பய்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு அருகாமைப் பகுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் வேகம் குறித்து விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தானியங்கி அடிப்படையில் இயங்கும் இந்த ஸ்பீட் கமராக்களின் ஊடாக யாராக இருந்தாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2023ம் ஆண்டில் மேலும் 25 தானியங்கி கமராக்கள் பொருத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.