Reading Time: < 1 minute

ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தை அண்டிய பகுதியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த வாகன கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகன கொள்ளை கும்பல் சுமார் நூறு வாகனங்களை கொள்ளை இட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த வாகன கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வந்துள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் நான்கு மில்லியன் தொடர் பெறுமதியான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கியூபைக்கை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.