Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் வரி அதிகரிப்பு தொடர்பில் நகர மேயர் ஒலிவியா சொள தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் பாரியளவில் வரி அதிகரிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொறன்ரோவில் இந்த வாரம் மேயர் சௌ, வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

வாடகை வீடுகளின் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முன்னதாக அறிவிக்கப்பட்ட தொகையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என அவர் குறிபிட்டுள்ளார்.

சொத்துக்களுக்கான வரி 10.5 சதவீதமாக அதிகரிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வரி அதிகரிப்பினை காரணம் காட்டி வாடகைத் தொகைகள் அதிகரிக்கப்படுவதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி அதிகரிப்பு பாதகமில்லாத வகையில் மேற்கொள்ளப்படும் என சௌ உறுதியளித்துள்ளார்.