Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் வன்முறைகளுக்கு இடமளிக்கப்படாது என நகர முதல்வர் ஒலிவியா சொள கோரியுள்ளார்.

காசா பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் போரைத் தொடர்ந்து, ரொறன்ரோவில் பல்வேறு வெறுப்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் முழுமையான அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதிலும் சமாதானத்தை வலியுறுத்தி வரும் தமக்கு இவ்வறாhன வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போரளரிகள் பணய கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களின் ஊடாகவே உடனடியாக சமாதானத்தை எட்ட முடியும் என சொவ் தெரிவித்துள்ளார்.