Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் யூத மத குரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யூத இன சமூகத்தை இலக்கு வைத்து குரோத உணர்வைத் தூண்டும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 7ம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களின் பின்னர் இவ்வாறு யூத சமூகத்தினர் மீதான வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

போர் ஆரம்பமானது முதல் குரோத உணர்வைத் தூண்டும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ வாழ் யூத சமூகத்தினர் இது குறித்து தங்களது; அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கனடிய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இவ்வாறான வன்முறைகளை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.