Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் முதாட்டி ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

79 வயதான ஸ்டிபென்ஸ் போர்கால்ட் என்ற பெண் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் வீட்டின் கூரையை பழுது பார்த்து தருவதாக கூறி இந்த மோசடி இடம் பெற்றுள்ளது.

இந்த மோசடியின் காரணமாக குறித்த பெண் 27 ஆயிரம் டாலர்களை இழந்துள்ளார்.

வீட்டின் கூரையை புனரமைத்து தருவதாக கூறி இரண்டு நபர்கள் முன்பணம் பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் வீட்டின் கூரையை திருத்திக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மிகவும் அன்பான முறையில் பழகி இந்த மூதாட்டியை ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடி சம்பவத்தொடரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ செலவுகளுக்காக வைத்திருந்த பணத்தையே இவ்வாறு கூரையை புனரமைப்பதற்காக வழங்கியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.