ரொறன்ரோ நகரில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் பிரபலமான விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் அனைத்தும் செப்டம்பர் 6ம் திகதி வரை ரத்து செய்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விழாக்கள் ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட சில நிகழ்வுகளில் கனேடிய தேசிய கண்காட்சி (சி.என்.இ), கரீபியன் கார்னிவல், ஹோண்டா இண்டி மற்றும் டேஸ்ட் ஆஃப் தி டான்ஃபோர்த் ஆகியவை அடங்கும்.
முதலில் ஜூலை 1 வரையே குறித்த நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்திருந்தது, ஆனால் தற்போது செப்டம்பர் வரை ஒத்திவைத்துள்ளது.
விழா ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், 2022ல் முழு வீச்சில் இந்த விழாக்களை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனேடிய தேசிய கண்காட்சியானது கண்டிப்பாக 2022ல் நடத்தப்படும் எனவும் மற்ற பிராந்திய அரசாங்கங்கள் அந்த உறுதியைப் பகிர்ந்து கொள்ளும் என்று தாம் நம்புவதாக மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 20கும் மேற்பட்ட கோடைகால விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவது, கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன் மட்டுமே என நகர நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.