கனடாவின் ரொறன்ரோ நகரின் நீர் கட்டண அறவீட்டில் சிக்கல்நிலை உருவாகியுள்ளது.
நீர் மானிகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு கட்டண அறவீட்டை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நகரின் சுமார் 141000 நீர்மானிகள் செயலிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கட்டணத்தை கணக்கிட்டு அறவீடு செய்ய முடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது மூன்று மடங்கு தொகையை கட்டணமாக செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு தசாப்த காலமாக நகராட்சி நிர்வாகம் சுமார் ஐந்து லட்சம் நீர்மாணிகளை வீடுகளில் பொருத்தியுள்ளது.
இவை தானியங்கி அடிப்படையில் செயல் படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகளுக்கு ஒருவர் சென்று நீர்மானியை வாசித்து கட்டணத்தை கணக்கீடு செய்வதனை தவிர்க்கும் நோக்கில் தானியங்கி மானிகள் பொருத்தப்பட்டுள்ளன.
எனினும் கடந்த குளிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நீர்மானிகள் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நீர்மாணிகளின் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் மானிகள் மாற்றீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 7200 வீடுகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக மின் நீர் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.