Reading Time: < 1 minute
கனடாவின் ரொறன்ரோவில் நாயுடன் வாகனத்தைக் களவாடிய நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
39 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு வயதான சொக்லெட் லாப்ராடோர் வகையைச் செர்ந்த நாய் இவ்வாறு களவாடப்பட்டது.
மகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கச் சென்ற நபர் ஒருவரின் வாகனம் இவ்வாறு களவாடப்பட்டிருந்தது.
வாகனம் களவாடப்பட்டு சில மணித்தியாலங்களில் வேறும் ஓர் இடத்தில் வாகனம் மீட்கப்பட்ட போதிலும் அதில் நாய் இருக்கவில்லை என வாகன உரிமையாளர் தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.
எவ்வாறெனினும் பின்னர் நாய் மற்றும் அதனை களவாடிய சந்தேக நபரையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.