Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு முதலுதவி செய்யப்பட்ட போதிலும் உயிர் காப்பு முயற்சிகள் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பொலிஸார் பொலிஸார் அறிவித்துள்ளனர்.