Reading Time: < 1 minute

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ரொறன்ரோ பாடசாலை ஆசிரியரொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த புனித சார்லஸ் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சபை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது இந்த விடயத்தில் விசாரணையை நடத்தி வருகிறது என்று ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது விசாரணையில் விடுப்பில் உள்ளதாக ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பெப்ரவரி 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். மேலும் 1,000 டொலர்கள் வரையான அபராதக் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும். இந்த மாதத் தொடக்கத்தில் கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்டபோது பாடசாலை மூடப்பட்டது.