Reading Time: < 1 minute

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரொறன்ரோவில் மட்டும் 500இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நகர சுகாதார அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை கனடாவில் ஒட்டுமொத்தமாக 63,496பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,232பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ரொறன்ரோவில் மட்டும் 504பேர் உயிரிழந்துள்ளதாக டாக்டர் எலைன் டி வில்லா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரொறன்ரோவில் கொவிட்-19 காரணமாக 504பேர் உயிரிழந்த கதைகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நகரத்தில் தொற்றுநோய் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கொவிட்-19 காரணமாக 391பேர் மருத்துவமனையில் உள்ளனர். 99பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர்.

இந்த துயரமான இழப்புகளை நான் பிரதிபலிக்காத ஒரு நாள் இல்லை. எனது குழுவின் சார்பாக, அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு விரைவாக குணமடைய விரும்புகிறேன்’ என கூறினார்.

ரொறன்ரோவில் நேற்று (புதன்கிழமை) 217பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.