Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் கார் கொள்ளை தொடர்பிலான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற தடுப்பாளர்களினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கார் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்குவோருக்கு இவ்வாறு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தகவல் வழங்குவதற்கு 5000 டாலர்கள் வரையில் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இந்த சன்மானம் வழங்கும் நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் இந்த சன்மானம் வழங்கும் நடைமுறை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கார்கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் அதனை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ரொறன்ரோவில் வாகனம் ஒன்று களவாடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் வாகன கொள்ளை சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சற்றே குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கார் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.