ரொறன்ரோவில் காபன் வெளியீட்டை அளவீடு செய்யும் கருவி வாடகைக்கு விடப்பட உள்ளது.
ரொறன்ரோவின் பொது நூலகத்தினால் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தங்களது வீடுகளின் காபன் வெளியீட்டு அளவு, காற்றின் தரம் என்பனவற்றை கண்டறிந்து கொள்வதற்கு இந்த கருவியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பீட்டர்பேர்க் மாநகரசபை இந்த திட்டத்தினை வட அமெரிக்காவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்கின்றது.
ஒரு வார காலத்திற்கு இந்த கருவியை வீட்டுக்கு எடுத்துச் சென்று தகவல்களை பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது.
இந்தக் கருவியில் மூன்று நிற சமிக்ஞை விளக்குகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காற்றின் தரம் நல்ல நிலையில் காணப்பட்டால் பச்சை நிறம், ஓரளவு தரம் தரமுடையது என்றால் மஞ்சள் நிறம், போதியளவு தரமில்லை என்றால் சிவப்பு நிறம் என இந்த சமிக்ஞைகள் காணப்படுகின்றன.
இந்த மாத நடுப்பகுதி அளவில் கார்பன் வெளியீட்டை அளவிடும் கருவியை வாடகைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என ரொறன்ரோ நூலகம் அறிவித்துள்ளது.