Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரையில் 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் 34 வயதான அலிஷா புருக்ஸ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலைச் சம்பவம் 81ம் படுகொலைச் சமப்வம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் மிகவும் கருணையான நல்லெண்ணம் கொண்டவர் என அவரது தாயாரான வெரோனிகா புருக்ஸ் தெரிவித்துள்ளார்.

அலிஸா, இளையோர் மற்றும் ஏதிலிகள் தொடர்பிலான பணிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பின இளைஞர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கும் அறக்கட்டளையொன்றில் அலிஸார் கடமையாற்றியிருந்தார்

.இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதான அரோன் ஷேயா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.