Reading Time: < 1 minute
ரொறன்ரோவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
குயின்ஸ் மற்றும் ஜேம்சன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரண்டு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினர் விரைவில் தீயைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்திற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.