கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கனடியா புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ரொறன்ரோ, மொன்றியால் மற்றும் வாங்கூவார் பகுதிகளில் குடியேறிகள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுச் செலவு அதிகரிப்பு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் டொரன்டோவை விட்டு வேறும் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடியேறிகள் வேறும் இடங்கள் நோக்கி நகர்வதற்கான பிரதான ஏதுவாக வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் விலைகள் கருதப்படுகின்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.