Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்டோவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராகவும் ஆயுத பயன்பாடு தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும் மூன்று போலி துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு எதிராக போலீசார் 13 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 18 மற்றும் 19 வயதுடையவர்வர்கள் என்பது குறிப்பிடதக்கது.