கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ரொரன்றோ நகரில் அமைந்துள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் பயணிகளை தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்
நேற்று மதியம் 2.00 மணியளவில், ரொரன்றோ சுரங்க ரயில் நிலையத்தில், ஒருவர் பயணிகளை கத்தியால் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்துவிட்டார். மற்றொரு பெண்ணின் நிலைமை இப்போது சீராக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தினமும் அலுவலகம் செல்வது போன்ற விடயங்களுக்காக ரயிலில் பயணிக்கும் பயணிகள், இந்த தாக்குதல் சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.