Reading Time: < 1 minute
ரொரன்டோ – ஸ்கார்பரோ உயர்தரப் பாடசாலையில் 12ஆம் வகுப்பு 18 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மிட்லாண்ட் & லோரன்ஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள டேவிட் & மேரி தோம்சன் கல்லூரியில் திங்கட்கிழமை (14 Feb, 2022) பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட 18 வயது மாணவன் பாடசாலையின் பின் கதவுகளுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் இலக்கு வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் இதனால் பொது பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பொலிஸார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.