ரஸ்ய படையினர் உக்ரைனில் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களை கனடா அம்பலப்படுத்தியுள்ளது.
உக்ரைன் நகரமொன்றின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் ரஸ்ய படையினர் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
உக்ரைனின் இர்பின் நகரில் இவ்வாறு நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜோலி அண்மையில் பிரதரமர் ட்ரூடோவுடன் உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நடைபாதைகளில் கால் வைக்க வேண்டாம் என தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரஸ்ய படையினர் இவ்வாறு நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் ஜோலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இர்பின் நகரில் இளம் தலைமுறையினர் அதிகளவில் வீடுகளை கொள்வனவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய படையினர் இர்பின் நகரை விட்டு வெளியேறிய போதிலும் ஆபத்துக்கள் தொடர்ந்துமு; காணப்படுவதாக அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.