Reading Time: < 1 minute

ரஷ்யாவில் கியூபாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற கனடியர் ஒருவரின் சடலம் ரஷ்யாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கியூபெக்கின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

68 வயதான பாராஜ் ஜார்ஜோர் என்பவரின் சடலம் தவறுதலாக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலத்திற்கு பதிலாக மற்றுமொருவரின் சடலம் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த நபரின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கனடியரை விடவும் 20 வயது குறைந்த ரஸ்ய பிரஜை ஒருவரின் சவப்பெட்டி கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், கனடியரின் சடலம் ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கியூபா அதிகாரிகள் இந்த தவறினை இழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கனடியரின் சடலத்தை அனுப்பி வைப்பதற்காக கியூபா அசராங்கம் பெற்றுக்கொண்ட 10000 டொலர் பணம் மீள அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கியூபா மற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர்களும் தொலைபேசி ஊடாக பேசியுள்ளனர்.