Reading Time: < 1 minute

எட்மண்டனில் தேசிய பூங்கா ரயில்களால் அதிகளவான கிரிஸ்லி கரடிகள் மோதப்பட்டு உயிரிழப்பதாக ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் மற்றும் உயிரியல் பேராசிரியரான கொலின் கசாடி செயின்ட் கிளெய்ர் தலைமையிலான குழு பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கனடா பூங்காக்கள் மற்றும் கனடிய பசிபிக் ரயில்வே அதிகாரிகள் 2000ஆம் ஆண்டில் பான்ஃப் தேசிய பூங்காவில் ரயில்களால் கிரிஸ்லி கரடிகள் கொல்லப்படுவதை அவதானித்துள்ளனர்.

இதற்கமைய, அப்போதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 21 கிரிஸ்லி கரடிகள் ரயில்களால் மோதப்பட்டு கொல்லப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டு ஆல்பர்ட்டா வனவிலங்கு சட்டத்தின் கீழ் கிரிஸ்லைஸ் கரடிகள் அச்சுறுத்தப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.