யோர்க் பிராந்தியத்தில் உள்ள கிங் நகரத்தைச் சேர்ந்த ஒருவக்கு வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கியுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள யோர்க் பிராந்திய பொது சுகாதார நிலையம், அங்குள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த, 2019ஆம் ஆண்டில் இப்பகுதியில் வெஸ்ட் நைல் வைரஸ்க்கு இலக்கான முதல் மனிதராக இவர் பதிவு செய்யப்பட்டுள்ளார்
இதனால் இப்பகுதியை அண்டிய மக்களை அவதானமாக இருக்குமாறு யோர்க் பிராந்திய பொது சுகாதார நிலையம், அறிவுறுத்தியுள்ளது.
மேலும், யோர்க் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் கரீம் குர்ஜி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
‘டிட் அல்லது இகாரிடின் கொண்ட பூச்சி விரட்டியைப் பயன்படுத்துவதை மூலம், இதனை தடுக்கமுடியும்.
ரொறன்ரோ மற்றும் பிராம்ப்டன் ஆகிய பகுதிகளில் குறித்த வகையான நுளம்புகளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருக்கும்போது பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள் மற்றும் வீட்டை சுற்றியுள்ள நீர் தேக்கங்களை அகற்றுங்கள், பூ சாடிகள், பறவைகளுக்கு வைக்கும் நீர் தாங்கிகளையும் அகற்றுங்கள்.
நுளம்புக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அதிகாலை மற்றும் மாலை வேளையில் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துங்கள்.
பாதிக்கப்பட்ட நுளம்பு கடித்ததன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாகவும், 70 முதல் 80 சதவீதம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.’ என குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்றுக்கு இரண்டு முதல் 15 நாட்களுக்குப் பிறகு தோன்றும் இதன் அறிகுறிகள், காய்ச்சல், தலைவலி, லேசான சொறி மற்றும் வீங்கிய நிணநீர் சுரப்பிகள் ஆகியவை அடங்கும்.
மிகச் சிலரே கடுமையான அறிகுறிககளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் இதில் நனவு இழப்பு, தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும்.