கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது, பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை எனவும், யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்” எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மத்துகம பொது விளையாட்டரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற களுத்துறை மாவட்டத்துக்கான ” ஜயகமு ஸ்ரீலங்கா” மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ” இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவதை வீரமாக கருதுகின்றனர் எனவும், இதன் மூலம் அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.