மோசடி சம்பவங்கள் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூரைத் திருத்தும் நிறுவனமொன்றில் கடமையாற்றுவதாகக் கூறி இவ்வாறு மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூரை திருத்துவதாக கூறி வீட்டு உரிமையாளர் ஒருவரை ஏமாற்றிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டு கூரையை பழுது பார்ப்பதாக கூறி வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, வீட்டு உரிமையாளரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்த போது குறித்த நபர் கூரை திருத்தும் நிறுவனங்கள் எதிலும் பணியாற்றியவர் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதான சிமோன் சார்னொக் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை பயன்படுத்தி குறித்த நபர் 5000 டொலர்கள் வரையில் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.