Reading Time: < 1 minute

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது கொழும்புக்கான விமான சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

மேலதிக விமான சேவையாக செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் மொஸ்கோவிலிருந்து சனிக்கிழமைகளிலும், கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடங்குகிறது.

அதன்படி எஸ்.யூ.288 என்ற விமானம் மொஸ்கோவில் இருந்து 22:50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 10:20 மணிக்கு கொழும்பு வந்தடையும் என ஏரோஃப்ளோட் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை எஸ்.யூ.289 என்ற விமானம் கொழும்பில் இருந்து 12:05க்கு புறப்பட்டு 18:40க்கு மொஸ்கோவை வந்தடையும்.

மேலதிக சேவையின் அர்த்தம் என்னவென்றால், மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கு ஏரோஃப்ளோட்டின் விமானங்கள் வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் வெள்ளி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மொஸ்கோவிற்குத் திரும்பும் விமான சேவைகள் இயக்கப்படும் என ரஷ்யாவின் முதன்மை நிறுவனமான ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.