கனடாவின் மொன்றியல் லாவல் பகுதியில் சாரதியொருவர் பஸ்ஸை சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் மீது மோதச் செய்து மேற்கொண்ட விபத்தில் இரண்டு பரிதாபமாக சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நான்கு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறார்கள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றின் மீது பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 51 வயதான பியரே அமான்ட் என்ற பஸ் சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொலை முயற்சி செய்ததாகவும், தாக்குதல் நடத்தியதாகவும், ஆயுதம் கொண்டு தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது பஸ்ஸை செலுத்தியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆடைகளை களைந்து குறித்த பஸ் சாரதி ஆக்ரோசமாக கூச்சலிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் சில சிறுவர் சிறுமியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லாகுலேட் தனது ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.