Reading Time: < 1 minute

அமெரிக்காவுக்கான கல்விசார் பயணங்களை மேற்கொள்வோருக்காக மொன்ரியல் பல்கலைக்கழகம் Université de Montréal புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக சமூகத்தினர் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுதல் மற்றும் நுழைவு மறுக்கப்படுதல் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பல மாணவர்கள், ஊழியர்கள் வெளிப்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாணவர்களும் ஆசிரியர்களும் பயணத்திற்காக முன்பாகவே கவனமாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் வேந்தர் டேனியல் ஜுட்ராஸ் (Daniel Jutras) குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க எல்லையில் பயணிகள் மின் சாதனங்களை (லேப்டாப், கைபேசி) சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் உரிமை பெற்றுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முக்கியமான மற்றும் ரகசியமான தகவல்களை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் முன் அவை பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கருவிகளின் கடவுச்சொற்களை (passwords) மாற்றி, பயணத்திற்குப் புறப்படும் முன் அவற்றை பாதுகாக்க ஆலோசிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளுக்கு சாதனங்களை அணுக அனுமதிக்க மறுத்தால், நுழைவு மறுக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவிற்கான பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், அமெரிக்க பயணங்களுக்கு முன் முனைப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பலர் ஆலோசித்து வருவதாகவும் மெக்கில் McGill பல்கலைக்கழக பேராசிரியர் அராஷ் அபிசாதே (Arash Abizadeh) தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.