Reading Time: < 1 minute

கனடாவின் மொன்ரியல் நகரில் கொரோனா தொற்றின் ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அவசர நிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மொன்ரியல் மேயர் Valérie Plante செய்வாய்க்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கியூபெக் பிராந்தியம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரே நாளில் கியூபெக் பிராந்தியத்தில் 5,043 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மொன்ரியல் நகரில் மட்டும் 1,656 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலை கட்டுக்குள் கொண்டுவர இந்த அவசர நிலை பிரகடனம் உதவும் என நம்புவதாக மேயர் Valérie Plante சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் இது இரண்டாவது முறையாக மொன்ரியல் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறை பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையானது கடந்த ஆகஸ்டு மாதத்தில் தான் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.