Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில மூத்த குடிமக்களுக்கு முன்னால், அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

பல அத்தியாவசியத் தொழிலாளர்கள் கோட்பாட்டு ரீதியாக ஒரு கொவிட்-19 நோய்த்தொற்றைக் கையாளச் சிறந்ததவர்களாக இருக்கக்கூடும்.

முன்பே வெளியிடப்பட்ட எஸ்ஏப்யுவின் ஆய்வில், மக்கள் தொகையில் வயதான உறுப்பினர்களுக்கு முன் தடுப்பூசிகளைக் கொடுப்பது 200,000க்கும் அதிகமான தொற்றுநோய்களைத் தடுக்கும்.

இது மாகாணத்தை கணக்கான சுகாதாரச் செலவுகள் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சேமிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்ஏப்யு தரவுமாதிரி நிபுணர் பால் டப்பர் கூறுகையில், ‘வயதானவர்களுக்கு பாதுகாப்பை நாம் உறுதிசெய்த பிறகு, அத்தியாவசிய தொழிலாளர்கள் தடுப்பூசிக்கு வரிசையில் அடுத்ததாக இருக்க வேண்டும். பணச் சேமிப்பு தொற்றுநோய்களைக் குறைப்பதன் மூலம் வருகிறது.

கொவிட்டின் பரவலைக் குறைக்க நாங்கள் தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம். இதன் பொருள் வயதானவர்களுக்கும் அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் குறைந்த வெளிப்பாடு உள்ளது’ என கூறினார்.