கனடாவின் றொரன்டோ மிருகக் காட்சிசாலையின் பறவைகள் காட்சிப் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோவின் பண்ணையொன்றில் இன்புளுவென்சா நோய்த் தொற்று பரவியதனை தொடர்ந்து இவ்வாறு மிருகக் காட்சிசாலையின் பறவைகள் காட்சிப் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிருகக் காட்சி சாலையின் பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிருகக் காட்சிசாலையிலிருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பண்ணையொன்றில் பறவைச் காய்ச்சல் நோய் பரவுகை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பறவைகள் காட்சிக்கூடம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகளை பராமரிக்கும் பணியாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.