Reading Time: < 1 minute

முடக்கநிலையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான அல்பர்ட்டா மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று மூன்றாவது முறையாக அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாகாணத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முறை ஏற்கனவே பேரழிவின் விளிம்பைத் தாண்டிவிட்டதாகக் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கொவிட்-19 தொற்று மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விரைவாக செயற்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
341 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் ஒரு முடக்கநிலை கடுமையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுகளின் தொடர்ச்சியான உயர்வு மாகாணத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு நிலையானது அல்ல என்றும், இது சரிபார்க்கப்படாவிட்டால் அனைத்து அல்பர்டான்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும எனவும் அவர் கூறுகின்றனர்.

இந்த மாதத்தின் மூன்றாவது கடிதம் மாகாண சுகாதாரப் பணியாளர்களால் பெருமளவில் கையொப்பமிடப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளுக்கு முறையிட அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.