கனடாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அம்பாசிடர் பாலமானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இருந்து அமெரிக்காவை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில், ஒரு வாகனத்தில் காணப்பட்ட மர்ம பொதி தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் வின்ட்சர் காவல்துறை முதன்முதலில் குறித்த நடவடிக்கை தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்தது. கனேடியப் பகுதியில் உள்ள பாலம் மூடப்படும் என்றும் மிக விரைவில் பாலம் எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்பதை அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, வாகன நெரிசலை தவிர்க்க சில வாகனங்களை வின்ட்சர்-டெட்ராய்ட் சுரங்கப்பாதைக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுமார் 50 முதல் 75 கனரக லொறிகள் பாலம் திறப்பதற்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது கனேடியப் பகுதியில் உள்ள பாலம் திறக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.