Reading Time: < 1 minute

கனடாவில் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுண்டதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தின் மில்டனில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டெரி மற்றம் வோல்கர்ஸ் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் பொலிஸார் வெளியிடவில்லை. எதனால் இந்த விபத்து நேர்ந்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.