Reading Time: < 1 minute
மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
மின்சாரத்துறை நிபுணர்கள் உட்பட பொறுப்பான அமைச்சர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கடன் உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மின்சார துறையின் மறுசீரமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், மின் கட்டணங்கள், மின் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.