Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

மார்க்கம் புச்சனன் ட்ரைவ் மற்றும் வோர்டன் அவன்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ளது.

மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

மரணம் சந்தேகத்திற்கு இடமானது எனவும், பிரேதப் பரிசோதனையின் பின்னரே இது குறித்த மேலதிக தகவல்களை வெளியிட முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் ஆள் அடையாள விபரங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை.

சீ.சீ.ரீ.வி காணொளி வழியாகவும் ஏனைய வழிமுறைகளிலும் விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.