கனடாவின் மானிட்டோபா பகுதியில் ஐந்து நாள் இடைவெளியில் மூன்று சிறுவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஐலண்ட் லேக் பகுதியில் 23 மாதங்களான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
பழங்குடியின சமூகம் வாழும் கார்டன்சில் ஃபர்ஸ்ட் நேசன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய சிறுவனுக்கு வினிபெக் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
குறித்த இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சென் தெரேசா என்னும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த பகுதியும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறுமி நண்பர் ஒருவரும் நீரில் நீந்தியதாகவும் அதிக ஆழமான பகுதிக்கு சென்ற காரணத்தினால் அவர்களால் நீச்சல் அடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அருகாமையில் இருந்த நபர் சிறுவனை மீட்டபோதிலும் இந்த சிறுமையை உயிருடன் மீட்க முடியவில்லை.
ஃபோர் பேஜ் ல பெறாரி என்னும் பகுதியில் மற்றும் ஒரு நீரில் மூழ்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் இரண்டு வயதான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
அருகாமையில் காணப்பட்ட சிறிய நீர் நிலையில் வீழ்ந்த சிறுவன் உயிரிழந்தான்.
மானிடோபாவில் வருடம் ஒன்றுக்கு சராசரியாக 22 நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணங்கள் காரணமாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் நிலைகளுக்கு சிறுவர்களை அனுப்பும் போது பெற்றோர் மிகுந்த அவதாரத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.